தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடற்படையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலின் கட்டளை தளபதி கப்டன் சமன் பெரேராவிடம் இந்த கப்பல் கையளிக்கப்பட்டது. இதற்கான கடற்படை சம்பிரதாய நிகழ்வுகள் இதனை தொடர்ந்து இடம்பெற்றன. நவீன வசதிகளை கொண்ட இந்த கப்பலின் நீளம் 107.5 மீற்றர் என்பதுடன் அகலம் 13.6 மீற்றராகும் .