புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஐக்கிய தேசியக் கட்சியில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கட்சியின் மறுசீரமைப்புக்குழு, உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐ.தே.கவின் முக்கிய அமைச்சர் ஒருவர் இது தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று நாட்டில் இருக்கும் சிறப்பான செயல் வீரர் எனவும் அவரது தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி புதிய பாதையில் பயணிக்க வேண்டும் எனவும் மேர்வின் சில்வா கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதிருக்கும் தடைகளைத் தாண்டி, கட்சியைப் புனரமைப்பதோடு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் எனவும், ரணிலைத் தவிர நாட்டை முன்னேற்ற ஆளில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.