புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் விசவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழிற்சாலையில் உள்ள அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் சிலர் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்தனர். பாதிப்படைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் 01.20 மணயளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது