தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஏப்ரல் 14, 2018

இலங்கைப் பெண்ணுக்கு பல மில்லியன் பவுண்ட் நட்டஈடு! - பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

இலங்கைப் பெண்ணுக்கு பல மில்லியன் பவுண்ட் நட்டஈடு! - பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு


தாதியரின் கவனக் குறைவு காரணமாக இலங்கை அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நஷ்டஈடாக பல மில்லியன் பவுண்டுகளை செலுத்துமாறு பிரித்தானியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நஷ்டஈடு தொகை எவ்வளவு என்பதை நீதிபதிகள் விரைவில் அறிவிக்கவுள்ளனர்
தாதியரின் கவனக் குறைவு காரணமாக இலங்கை அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நஷ்டஈடாக பல மில்லியன் பவுண்டுகளை செலுத்துமாறு பிரித்தானியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நஷ்டஈடு தொகை எவ்வளவு என்பதை நீதிபதிகள் விரைவில் அறிவிக்கவுள்ளனர்

2008ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை அகதி தம்பதிக்கு, 2009இல் குழந்தை பிறந்தது. அப்போது தாய்க்கு பாலூட்டல் தொடர்பாக உரிய அறிவுரைகளை தாதியர் வழங்கவில்லை. குறித்த தமிழ் தாய்க்கு ஆங்கில அறிவு போதுமானதாக இல்லாத நிலையில் அவரால் தாதியர் கூறிய அறிவுரைகளை பின்பற்ற முடியவில்லை.

இதன்போது தாதியரும் குறித்த இலங்கை தாய்க்கு புரியும் வகையில் செயற்படவில்லை என்று நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ளார்.நிலூஜன் என்ற இந்தக் குழந்தை 8 வருடங்களுக்கு முன்னர் பிறந்தது முதல் தொடர்ந்தும் அழுது கொண்டிந்த போதும் அதனை தாதியர் கவனத்தில் கொள்ளவில்லை. தாய்க்கு ஆங்கில அறிவு புரியவில்லை என்ற காரணத்தை காட்டி தாதியர் அவருக்கு பாலூட்டல் தொடர்பில் உரிய அறிவுரைகளை வழங்கவில்லை.

விரைவிலேயே குறித்த குழந்தையையும் தாயையும் வைத்தியசாலை நிர்வாகம் வீட்டுக்கு செல்ல அனுமதித்தது. இந்தநிலையில் பாலூட்டல் மற்றும் போசனைக் குறைப்பாடு காரணமாக குறித்த குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி தமது தீர்ப்பதில் தெரிவித்துள்ளார்.

எனவே வைத்தியசாலை நிர்வாகம் பல மில்லியன் பவுண்ட்ஸ்களை குழந்தையின் பெற்றோருக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு தொடர்பில் கருத்துரைத்துள்ள தனியார் வைத்தியசாலையின் நிர்வாகம், தீர்ப்பை ஏற்று நட்டஈட்டை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவம் 2008ஆம் இடம்பெற்றபின்னர் தமது வைத்தியசாலையில் மொழிப்பெயர்ப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.