தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த - ஆயுள் தண்டனை

புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த - ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும், கல்வி செலவுக்கு 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து அனுப்பினார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே.

அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் காத்திருந்தனர். ஆனால் ஆனந்த சுதாகரன் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை.

இந்தநிலையில் சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வின் இரவு விருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறையில் அரசியல் கைதியாக வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஆளுநரினால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மாதாந்தோறும் இவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

அந்நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவமோகன், யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் உட்பட மாகாணசபை அமைச்சர்கள் அதிகாரிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.