புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்போது, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் மீண்­

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்போது, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் மீண்­டும் அமைச்­ச­ராகப் பதவி ஏற்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோச­னையை முன்­னாள் நீதி அமைச்­சர் விஜயதாச ராஜ­பக்ச நிரா­க­ரித்­துள்­ள­தாக கூறப்படுகிறது. வெளிவிவகார அமைச்­ச­ராகப் பத­வி­யேற்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோச­னையை அவர் நிரா­க­ரித்­துள்­ள­தாகத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

வெளிவிவகார அமைச் ­ச­ராகப் பதவி வகிக்­கும் திலக் மாரப்­பன, அந்­தப் பத­வி­யில் இருந்து விலக இணக்­கம் தெரி­விக்­க­வில்லை. இந்­தப் பின்­ன­ணி­யில், வெளிவிவகார அமைச்­ச­ராகப் பத­வி ­யேற்­ப­தன் மூலம் கட்­சிக்­குள் பிரச்­சி­னை­கள் ஏற்­பட வாய்ப்பு இருப்­ப­தாகக் கூறியே விஜய­தாச ராஜ­பக்ச குறித்த யோச­னையை நிரா­கரித்­தார்.

மீண்­டும் நீதி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்க விரும்­ப­ வில்லை என­வும், அமைச்சுப் பத­வியை விட 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மக்­கள் வழங்­கிய ஆணைக்கு அமையச் செயற்­பட்டு, 64 லட்­சம் மக்­க­ளின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற ஆத­ர­வ­ளிப்­ப­தாக விஜய­தாச ராஜ­பக்ச கட்­சி­யின் தலை­மைக்கு அறி­வித்­தார்.

அமைச்­சர் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­டும், கட்­சி­யால் கைவி­டப்­பட்ட நிலை­யில் இருந்த போதி­லும் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தைத் தோற்கடிக்க அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­ட­தா­க­வும், அர­சி­யற் பத­வி­கள் மற்­றும் சிறப்­பு­ரி­ மை­களை விடக் கொள்­கை­களை மதிப்­பதே இதற் குக் கார­ணம் என­வும் அவர் கூறி­யுள்­ளார்.