புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் தெரிவு நேற்று மாலை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெரிவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அ.பஞ்சலிங்கம் மற்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெ.நடேசன் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் 7 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று தவிசாளர் பதவியை கைப்பற்றியது. உப தவிசாளருக்கான வாக்கெடுப்பும் பகிரங்க வாக்கெடுப்பாக இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் த.சிவகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.