புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

பேசாலைக் கடற்கரையில் மோட்டார் குண்டுகள்!

மன்னார்- பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று மதியம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால், மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் தாழ்வுபாடு மீனவர்கள் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டிய போது இரும்புப்பெட்டியை அவதானித்து அருகிலுள்ள கடற்படையினரிடம் தெரிவித்தார். பின்னர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டனர். குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள்- 15 மற்றும் 61.ரக மோட்டார் குண்டு- 1 என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்குற்பட்ட காட்டுப்பகுதியில் செயழிலக்கச் செய்யப்பட்டன.