தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பெரும் வெற்றி! - சுமந்திரன் கூறுகிறார்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பெரும் வெற்றி! - சுமந்திரன் கூறுகிறார்


மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்று அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது அந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்று அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது அந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளில் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணிகளை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், “1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது.

அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப் பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும். அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம்.

காணி விடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது. 6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிறுவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.