புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக,

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற, முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர், பிரசன்ன நாணயக்காரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய, சந்திர வகிஸ்டாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்கிரதுங்கவின் குறிப்புப் புத்தகம் ஒன்றை, சந்திர வகிஸ்டாவுக்கு தாம் வழங்கியதாக பிரசன்ன நாணயக்கார விசாரணைகளின்போது தெரிவித்திருந்தார்