www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்படுத்தமாட்டோம்! - எழுத்துமூலம் உறுதியளித்த இராணுவம்

ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்படுத்தமாட்டோம்! - எழுத்துமூலம் உறுதியளித்த இராணுவம்


ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற இராணுவம் இடையூறுகளை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக, இராணுவத் தரப்பு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற இராணுவம் இடையூறுகளை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக, இராணுவத் தரப்பு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது.

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை கடந்த மாதம் 19 ம் திகதி வழிமறித்த இராணுவம் அவரது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததோடு அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர். இந்நிலையில் தனது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் மற்றும் இராணுவ தரப்பினரை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற விசாரணையில், நடைபெற்ற விடயங்களை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டமை தொடர்பில் என்ன பரிகாரம் கிடைக்க வேண்டுமென கோரப்பட்டது.

அதற்கு குறித்த ஊடகவியலாளர், தான் மற்றும் சக ஊடகவியலாளர்கள் சுயாதினமாக பணிபுரிய இராணுவம் இடையூறு வழங்க கூடாது எனவும் தனக்கு உயிராபத்தை விளைவிக்க கூடிய யாரும் அங்கு இல்லை. எனவே அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அதற்கு இராணுவ தரப்பே பொறுப்பு எனவும் அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் இராணுவத்தால் நிகழாது என உத்தரவாதம் கோரப்பட்டது.

அதற்கு இராணுவத்தரப்பு இணங்கி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூல ஆவணம் வழங்கியுள்ள நிலையில் சுமூகமான நிலை எட்டப்பட்டுள்ளது.