தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஏப்ரல் 11, 2018

நானாட்டான் பிரதேச சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு!

நானாட்டான் பிரதேச சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு!

நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று நானாட்டான் பிரதேச சபையில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருச்செல்வம் பரஞ்சோதியையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி றோஜர் ஸ்ரலினையும் முன்மொழிந்தனர்.

இதன்போது, 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்புக்கு ஆதரவளித்தமையால் இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்றனர். இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் தலைவர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, உப தலைவர் தெரிவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம்பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.இதன்போது பகிரங்க வாக்கெடுப்புக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தலைவர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம்பெற்றது.

குறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.இந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுளச்சீட்டின் மூலம் உப தலைவர் தலைவர் தெரிவு இடம்பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.