புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு கனடாவில் படுகொலை செய்யப்பட்ட மற்றொரு ஈழத் தமிழர்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட மற்றொரு ஈழத் தமிழர்!

கனடாவில் தொடர் கொலையாளி ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக ப்ரூஸ் மெக்ஆர்தர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் கொலை செய்தவர்களை விவசாய காணிகளில் புதைத்து வந்தமையும் தெரியவந்துள்ளது.

அவரால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் என்ற 37 வயதான நபர் என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உருகுலைந்திருந்த அவரது சடலம், சர்வதேச முகவர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கிருஷ்ணகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கனடாவின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு Scarboroughவில் வாழ்ந்து வந்துள்ளார்.

தொடர் கொலையாளி மெக் ஆர்தரினால் முன்னர் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டொரென்டோ ஓரினச் சேர்க்கை கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்ணத்துக்கும், இந்த கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.