தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்! - சிவகரன்

அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்! - சிவகரன்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானத்திற்கு மாறாக சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்த பிரதேசசபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, கொள்கை பற்றோடும் விசுவாசத்தோடும் வாக்களித்த மக்களிற்கு தேர்தல் அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இந்த இழி செயலில் ஈடுபட்டனர்.அவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறான ஒரு சில சந்தர்ப்பவாதிகளால் தமிழ் தேசியம் ஒருபோது தளர்வடையப் போவதில்லை.

குறித்த நபர்களே அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போவார்கள் என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.தவறான பாதை வகுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழின அழிப்பாளர்களுடனும் தமிழ்த் தேசிய விரோத சக்திகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, கருணா குழு போன்றவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது போல எமது அங்கத்தவர்களும் நிலை மாற முடியாது என்பதே எமது திடமான முடிவு.

வடக்கு, கிழக்கு எங்கும் எவரையும் ஆதரிப்பதில்லை என்பது எமது கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்.ஆகவே இந்த தீர்மானத்தை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.