தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்டர்போல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பத்துடன், பொலிஸ் ஊடக அலுவலகம் வெளியிடப்பட்டடுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில், அர்ஜூன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது