புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பிரதமருக்கு எதிரான

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்தில் மீண்டும் இணைவது குறித்து , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்தியிருப்பதாக அந்த அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் அவர் சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

இறுதி நேரத்திலேயே எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.தன்னுடன் இணைந்து வாக்களித்த 15 பேரின் கோரிக்கை மற்றும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டதன் காரணமாகவே எஸ்.பி. திஸாநாயக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நடந்த பேச்சுகளில், தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியினர் கடும் அழுத்தங்களை கொடுத்த போது, ஐக்கிய தேசியக்கட்சி அழுத்தங்களை கொடுத்தாலும் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தியதாக அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.