புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான, தர்மரட்ணம் சிவராமின் (தராக்கி) 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில், எதிர்வரும் 28ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

“இலங்கை அரசியலில் மக்கள் மயப்படவேண்டிய ஊடக மனோநிலை” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அ.நிக்சன் உட்பட சிங்கள, தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் சிவராமின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, சிரேஷ்ட ஊடகவியலாளர் சண். தவராஜாவின் “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், புதிய செய்தித் தளம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேலும், சிவராம் நிகழ்வையொட்டியதாக “ஊடகம் - மக்கள் - அரசியல்” என்ற தலைப்பில், அன்றைய தினம் காலை, கல்லடியிலுள்ள "வொயிஸ் ஒப் மீடியாவில்" ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்றும் நடைபெறவுள்ளது.