தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தனது பெயர் தேசிய பட்டியலில் இருப்பதாக கூறினார். எனினும் தேர்தலில் பின்னர் வெள்ளவத்தை தெற்கு பிரதேச சபையை நான் கோரிய போதிலும் அதனைத் தர மறுத்தமையின் காரணமாகவே கட்சியில் இருந்து விலகி நவோதய மக்கள் முன்னணியுடன் இணைவதாக வேலணை வேணியன் தெரிவித்தார்.

கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வேலணை வேணியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், '' ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தேர்தல் பிரசாரத்தின் போது எமக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனக்கு மாத்திரமல்லாது கட்சியில் அங்கம் வகித்த இளைஞர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தவறியமையால் சுமார் 17 இளைஞர் உறுப்பினர்கள் இது வரையில் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

அரசியலில் இலாபம் தேடுவதும் உழைப்பதும் என்னுடைய நோக்கம் அல்ல. மக்களுக்கு சேவை வழங்குவது மாத்திரமே எமது நோக்கமாகும். அதனாலேயே மக்களுக்கு பல வருடங்களாக சேவையாற்றிவரும் நவோதய மக்கள் முன்னணியில் இணைந்துள்ளேன். நாட்டில் தற்போது பல கட்சிகள் காணப்பட்டாலும் வறிய மக்களுக்கான சேவையை வழங்கும் கட்சியாக நவோதய மக்கள் முன்னணியை இனங்கண்டமையினாலேயே அக்கட்சியுடன் கை கோர்த்துள்ளேன்.

தலைமைத்துவங்களின் சுய நல நோக்கங்களின் காரணமாக பல இளைஞர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்சியிலிருந்து விலகும் அல்லது விலகிய எந்தவொரு உறுப்பினரிடமும் கட்சி தலைவர் மனோ கணேசன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த ஒரு கலந்துரையாடலில் ஈடுபடவில்லை.

ஜனநாயக மக்கள் முன்னிணியின் செயலாளருடனான முரண்பாடுகள் காரணமாக பல உறுப்பினர்கள் விலகினார்கள் என கூறப்படுகின்றது. அது எந்த அளவில் உண்மை என எமக்கு தெரியாது எனினும் அவ்வாறான பாதிப்புக்கள் கட்சிக்குள் காணப்படுகின்றது.