புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 12, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு வடக்கின் ஆளுநர் யார்? - குரே மாற்றப்பட்டதால் குழப்பம்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

வடக்கின் ஆளுநர் யார்? - குரே மாற்றப்பட்டதால் குழப்பம்!

வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து 7 மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்கு – திருமதி. நீலூகா ஏக்கநாயக்கவும், மத்திய மாகாணத்துக்கு ரெஜினோல்ட் குரேவும், தென் மாகாணத்துக்கு – மார்ஷல் பெரேராவும், வட மத்திய மாகாணத்துக்கு – எம்.ஜி. ஜயசிங்கவும், ஊவா மாகாணத்துக்கு பி.பீ. திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை வடக்கு மாகாண ஆளுநராக கே.சி. லோகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் வட மேல் மாகாணத்துக்கு ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.