தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஏப்ரல் 18, 2018

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேசசபையை

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேசசபையை ஐதேகவின் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 வாக்கும் கிடைத்தன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.செந்தூரன் 6 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு கூட்டமைப்பின் 06 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

இதையடுத்து பிரதித் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆர்.சிந்துஜன் 7 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.ராஜேஸ்வரி 06 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

13 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 6 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிக்கட்சி 4 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஐனநாயக கட்சி ஒரு உறுப்பினரையும், சுதந்திரக்கட்சி இரண்டு உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.