புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் பின்வரிசை உறுப்பினர்கள் 24 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால பக்கசார்பான முறையில் நடந்து கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குற்றம் சுமத்தி வந்தனர்.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது பிரதிசபாநாயகர் எவரும் நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பின் பிரகாரம் பிரதி சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவான முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் உட்பட ஒரு சில அமைச்சர்கள் 24 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.