புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

கடந்த பெப்ரவரி மாதம், ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்காக

கடந்த பெப்ரவரி மாதம், ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்காக லெபனான் அனுப்பப்பட்ட 49 இலங்கை இராணுவத்தினர் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவது
அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அமைதிகாப்புப் படை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.

 
பகுப்பாய்வுகளின் போது, குறித்த 49 பேர் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவர்களை இலங்கை அரசாங்கம் தமது சொந்த செலவில் மீண்டும் இலங்கைக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும். வழமையாக ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது இலங்கை மனிதஉரிமைகள் அமைப்பின் பகுப்பாய்வு அனுமதி தேவையானது என்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் பேச்சாளர் நிக் பின்பேக் தெரிவித்துள்ளார்.