தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஏப்ரல் 12, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

மாந்தை மேற்கில் மண் கவ்வியது கூட்டமைப்பு!


மாந்தை மேற்கு பிரதேச சபையை, ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச சபையை, ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.

சபையில் 25 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது. இதன் போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் 6 வாக்ககளையும் பெற்ற நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், சுயேச்சைக்குழுவைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் ஆசீர்வாதம் சந்தியோகுவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் நடு நிலை வகித்தனர்.

அதனைத்தொடர்ந்து உப தலைவர் தெரிவு இடம் பெற்றது. உப தலைவர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் 15 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி 7 வாக்குகளையும் பெற்ற நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், ஹீனைஸ் பாரூக், முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.