தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகளை அபகரித்த முகமூடிக் கொள்ளையர்கள்!

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகளை அபகரித்த முகமூடிக் கொள்ளையர்கள்!


அளவெட்டி பகுதியில் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு 12 மணியளவில்- குளியலறை யன்னல் கம்பிகளை வளைத்து 3 கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்துக்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள்.
அளவெட்டி பகுதியில் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு 12 மணியளவில்- குளியலறை யன்னல் கம்பிகளை வளைத்து 3 கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்துக்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள்.

வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தினர். தேடுதலின் போது வீட்டில் இருந்த தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம் என 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது மிளகாய் தூளினை வீடு முழுவதும் விசிறி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு வீட்டார் அறிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.