தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!

மட்டக்களப்பில் காணாமல்போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு- இருதயபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய, தங்கவேல் ஜெயராஜ் என்ற நபரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணவில்லையென, அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து இவர் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு சின்ன உப்போடை, வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.மேலும் இவரின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்