தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஏப்ரல் 18, 2018

அரசியல்வாதிகளால் இலங்கையின் கிரிக்கெட் துறை அழிக்கப்பட்டு

அரசியல்வாதிகளால் இலங்கையின் கிரிக்கெட் துறை அழிக்கப்பட்டு வருவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருவருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்லாதவர்களால் கிரிக்கெட் அழிவடைந்து செல்கின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கை. வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம் என்று முரளி தெரிவித்துள்ளார்.