புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

நாட்டைப் பிளவுபடுத்துவதை மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டைப் பிளவுபடுத்துவதை மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது கடமையாக கொண்டுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தலதா மாளிகைக்கு இன்று தனது பாரியாருடன் சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஸ வழிபாடுகளின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

“ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரது கடமைகள் என்ன? அவர் வடக்கை பிளவுபடுத்துவதை மாத்திரமே கடமையாக கொண்டுள்ளார். குறைந்த பட்சம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி கதைப்பதில்லை. வவுனியாவிலும் கூட்டமைப்பினர் தோல்வியடைந்து விட்டனர். அவர்கள் மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடையே வீழ்ந்து கிடக்கின்ற நிலையில், நாங்கள் ஏன் புதிதாக முயற்சிக்க வேண்டும்? பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு எதிர்ப்பார்ப்புக்கள் தோற்றதன் பின்னர் மக்களின் எதிர்ப்புக்கள் வெளிவர ஆரம்பிக்கும். அதன் விளைவுதான் லண்டனில் மைத்திரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்” என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.