புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி! [

சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி!
[சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மல்லாகத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மல்லாகத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து இரவு உணவு வாங்குவதற்காக சுன்னாகம் நோக்கி குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர். விபத்தில் படுகாயமடைந்த ராமேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் பட்டா ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.