தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசமானது! - தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று மோதியதால் வந்த வினை

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசமானது! - தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று மோதியதால் வந்த வினை


வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இன்று வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சு.ஜெகதீஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் ஆகியோரின் பெயர்கள்
தவிசாளர் பதவிக்காக, முன்வைக்கப்பட்டன.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இன்று வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சு.ஜெகதீஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்காக, முன்வைக்கப்பட்டன.

முதல் சுற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆ.அந்தோனி 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் 6 வாக்குகளைப் பெற்றார். இதன்போது தமிழர் விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்தார்.

உப தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நவரட்ணம் சிவாயினியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி,அருள்கரனும் போட்டி இட்டனர். இதில் சிவாயினிக்கு 7 வாக்குகளும் அருள்கரனுக்கு 6 வாக்குகளும் கிடைத்த நிலையில் ந.சிவாயினி உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார் .