தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

எலுவான்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து புத்தளம் -

எலுவான்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டுள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் மாவட்டத்தில் அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டதினால் புத்தளம் எலுவான்குளம் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசத்திலுள்ள பாலத்திற்கு மேலாக இரண்டு அடி வெள்ளம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.