தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஏப்ரல் 14, 2018

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்! - சம்பந்தனும் பங்கேற்றார்

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. ஜனாதிபதி தனது பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார். நிகழ்வில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கலைஞர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.