புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் வானும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வான் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். டிப்பரில் பயணம் செய்த மூவரும் வானில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்., மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பொலன்னறுவையில் இருந்து கோழி ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி வந்த டிப்பர் வாகனம் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் மீது மோதியது. இதன்போது டிப்பரில் மோதுண்ட வான் மின்கம்பதிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36வீட்டுத்திட்டத்தை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.