தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

பலமான தமிழ்க் கட்சி உருவாவதை ஐதேக விரும்பாது! - மனோ கணேசன்

பலமான தமிழ்க் கட்சி உருவாவதை ஐதேக விரும்பாது! - மனோ கணேசன்

பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை, அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவானால் அது தமக்கு சார்பாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி விரும்பும் என்ற உண்மையை கூறுவதற்கு நான் அச்சப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை, அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவானால் அது தமக்கு சார்பாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி விரும்பும் என்ற உண்மையை கூறுவதற்கு நான் அச்சப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'' ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார். அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுடன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல. சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என.

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எதனையாவது செய்துள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன். அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறி வந்த விடயங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள். மேலும் நாங்களும் உடன்படிக்கை எதனையும் செய்யவில்லை. அரசிடனான உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இது வரை எத்தனை உடன்படிக்கைகள் செய்யப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?

ஆகவே நாம் செய்யும் உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம் தான் நடக்கிறது என்றார்.