புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைத்திரிபால சிறிசேனவை திரும்பிப் போகுமாறு முழக்கங்களை எழுப்பியவாறு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

“மைத்திரியே திரும்பிப் போ”, “எமக்கு வேண்டாம் அரசியலமைப்பு, இறுதித் தீர்வு தமிழீழமே” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.