தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

கனடாவில் TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட

கனடாவில் TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 47 வயதுடைய தமிழர் ஒருவரை டொரெண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பேருந்தில் பயணித்த 15 வயதான சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அடுத்த நாள் மாலை 5 மணி முதல் 5.30 வரையிலான காலப்பகுதியினுள் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களுக்கு பின்னர் அடுத்த நாள் பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் 47 வயதான கேதீஸ்வரன் சண்முகநாதன் என்ற 47 வயதான தமிழர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த கனடிய ஊடகம் தெரிவித்துள்ளது.