சனி, மே 05, 2018

0ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் – மஹிந்த

நாட்டுக்கு எந்தவித விளைவும் எற்படாவிட்டால் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி நாடாளுமன்றில் கொண்டு வர உள்ள 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டின் ஸ்திரத்தன்மைக்கோ நாட்டுக்கு பாதக நிலைமை ஏற்படாவிட்டால், ஆதரவளிக்கத் தயார்.

ஏற்கனவே ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் தேவை கூறப்பட்டு வருகின்றது.