தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மே 06, 2018

ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.