தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 30, 2018

16 பேர் அணி சம்பந்தனுடன் சந்திப்பு

இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறும் காரணிகளை நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறும் காரணிகளை நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்கள் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியாக செயற்படும் 16 பேர் கொண்டு குழுவினராக நாம் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும் நிலையில் நாம் முன்னெடுக்கும் காரியங்கள், எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் காரணிகளில் நாம் எவ்வாறு செயற்படுவோம் என்ற விடயங்கள் மற்றும் சு.க.வின் கொள்கைகளிலிருந்து அடுத்து நாம் செயற்படும் காரியங்கள் குறித்து இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடினோம்.

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எமக்கு முன்வைத்த காரணிகளை அனைத்தையும் இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என அவர் கூறியமை முக்கியமானதாகும். இந்த நிலைப்பாட்டினை எட்டவே கடந்த காலங்களில் கடுமையாக போராட வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அவர்களின் நிலைப்பாடுகள் நாட்டினை ஐக்கியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

தமிழ் தலைமைகளே இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் தெற்கின் அரசியல்வாதிகள் இந்த நிலைபாட்டினை செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த நாடு குழப்பமடைந்தது என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டும்.

சம்பந்தன் ஒரு நேர்மையான அதேபோல் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வாதியாவார். ஆகவே எம்முடனான சந்திப்பில் அவர் முன்வைத்த காரணிகள் மிகவும் முக்கியத்துவமானவையாகும்.

ஆகவே அவருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையை எமது அரசியல் பயணத்திலும் அதேபோல் நாட்டின் அரசியல் பயணித்திலும் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகின்றோம் என்றனர்