புதன், மே 09, 2018

மே 18ம் திகதி பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்துகின்றார் சீ.வீ. விக்னேஸ்வரன்: - சிங்கள ஊடகம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் எதிர்வரும் 18ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு வட மாகாண முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் கடந்த 7ம் திகதி இது குறித்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகாமையில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நினைவஞ்சலி நிகழ்வு குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போரில் உயிரிழந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் எனவும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது