தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மே 12, 2018

மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!' - பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல்

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

`பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.


`பங்கேற்பவர்கள்’ என சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, `ஓவியா ஆர்மி’, `ட்ரிகர் பண்றாங்க’, `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `முட்டை எப்படிடா காணாமப் போச்சு’ போன்ற வார்த்தைகள் வைரலாகின. ஹிட் ஆன ஷோ என்றால் வெர்ஷன் 2 வேண்டாமா? இதோ `பிக்பாஸ் 2’ தயாராகி விட்டது.


ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார். இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது.