தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மே 06, 2018

கடும் வெப்பம் 20ஆம் திகதி வரை நீடிக்கும்!

தற்போது நிலவும் கடுமு் வெப்பமான காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடரும் என்றும், அதன் பின்னரே இந்த நிலைமை குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடைக்கால பருவக்காலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை, முன்னர் இருந்ததை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், குருணாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் அதிக வெப்பமான காலநிலை நிலவ கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா உட்பட பல பிரதேசங்களில் நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மழையுடன் மின்னேரிய சரணாலயத்தின் ஊடாக செல்லும் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அங்கு சென்றிருந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட பலர் பல மணித்தியாலங்கள் சரணாலயத்திற்குள் சிக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.