புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 30, 2018

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் – 8 பிராந்­திய அலு­வ­ல­கங்­கள் வடக்கு, கிழக்­கில்!

12 பிராந்­தி­யப் பணி­ய­கங்­களை அமைப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் அதற்கான அனைத்து
நட­வ­டிக்­கை­க­ளை­யும் இன்­னும் 3 மாதங்­க­ளுக்­குள் செய்து முடிக்­கும் வகை­யில் பொறி­முறை வகுத்து வரு­கின்­றது.
இவ்­வாறு அந்­தப் பணி­ய­கத்­தின் தலை­வ­ரான சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். காணா­மல்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு கொழும்­பில் இன்­னும் நிரந்­த­ரக் கட்­ட­டம் வழங்­கப்­ப­ட­வில்லை.
தற்­கா­லிக அலு­வ­ல­கத்­தி­லேயே அதன் செயற்­பா­டு­கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. தலைமை அலு­வ­ல­கத்­துக்­கு­ரிய ஆள்­சேர்ப்பு இடம்­பெற்­றி­ருந்­தா­லும் பிராந்­திய அலு­வ­ல­கங்­க­ளுக்­கு­ரிய நிர்­வா­கப் பொறி­முறை இன்­னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கு­ரிய பணி எப்­போது ஆரம்­ப­மா­கும், எந்­தக் காலப்­ப­கு­திக்­குள் நிறை­வு­பெ­றும் என வின­வி­ய­போதே சாலிய பீரிஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­தா­வது-
பிராந்­திய அலு­வ­ல­கங்­களை அமைக்­கும் பணியை மூன்று மாதங்­க­ளுக்­குள் நிறை­வு­செய்­வதே எமது இலக்­காக இருக்­கின்­றது. ஆள்­சேர்ப்பு, பயிற்­சி­ய­ளிப்பு உள்­ளிட்ட விட­யங்­கள் நிறை­வு­பெற்று நிர்­வாக கட்­ட­மைப்பு முழுமை பெற எப்­ப­டி­யும் 6 மாதங்­கள் வரை செல்­லும்.
காணா­மல்­போ­னோர் பணி­ய­கத்­தின் உறுப்­பி­னர்­கள் எதிர்­வ­ரும் 2ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு களப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ள­னர். எதிர்­வ­ரும் 24ஆம் திக­தியே முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் செல்­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.
2ஆம் திகதி இடம்­பெ­ற­வி­ருந்த திரு­கோ­ண­மலை மாவட்­டத்­துக்­கான பய­ணம் 13ஆம் திக­தி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தா­லேயே முன்­கூட்­டியே கிளி­நொச்சி செல்­கின்­ற­னர் பணி­யக உறுப்­பி­னர்­கள். காணா­மல் ­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­களை நேரில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டு­வ­தும், சாட்­சி­யங்­க­ளைப் பதி­வு­செய்­வ­துமே பய­ணத்­தின் பிர­தான நோக்­க­மா­கும்.
காணா­மல்­போ­னோ­ருக்­கான பணி­ய­கத்­தி­னர் கடந்த 12ஆம் திகதி மன்­னா­ரில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளு­டன் முத­லா­வது கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­னர். இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 250 உறுப்­பி­னர்­கள் வரை­யில் பங்­கேற்­ற­னர்.
அது வெற்­றி­க­ர­மா­ன­தாக அமைந்­தது- என்­றார்.எனி­னும், பணி­ய­கத்­தின் மீது உற­வி­னர்­கள் சிலர் கடும் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­னரோ என்று சாலிய பீரி­ஸி­டம் கேட்­ட­போது, “”மக்­கள் மத்­தி­யில் விரக்தி ஏற்­ப­டு­வது வழமை. நாம் சுயா­தீ­ன­மா­கச் செயற்­பட்டு நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே விரும்­பு­கின்­றோம்’’-­என்­றார்.