புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 16, 2018

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ்.பல்லைக்கழகத்தில் இருந்து மோட்டார் வாகனப் பேரணி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு மே 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முன்றலில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் ஆரம்பாமாகும் இந்த வாகனப் பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தனை அடைந்து ஏ-35 வீதியூடாக முற்பகல் 10.45க்கு முள்ளிவாய்க்காலை அடையும்.

மோட்டார் வண்டி இல்லாதவர்களுக்குப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மோட்டார் வண்டிகளுடன் இணைந்து கொள்பவர்களும் இணைந்து கொள்ளலாம் என்றும், கறுப்பு மேலாடை அணிந்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.