புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 12, 2018

இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறுகின்ற இனப்படுகொலைகளை ஆதாரபூர்வமாக காட்சிப்படுத்தி யேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளது.

அத்தோடு இக் கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழ் இளையோர் அமைப்பினர் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உரையாடல்களில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பு கண்காட்சி தொடர்ச்சியாக ஏனைய நகரங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 10 மணிக்கு ஹம்பூர்க் நகரத்திலும் மாலை 16 மணிக்கு கண்ணோவர் நகரத்திலும் நடைபெறவுள்ளது.