தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 31, 2018

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த 22-ந்தேதி இந்த போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஏராளமானோர் அங்கு பேரணியாக திரண்டு சென்றனர்.அப்போது கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 

இதைத்தொடர்ந்து, கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என பேசப்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில், வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என கோரப்பட்டுள்ளது.