தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மே 12, 2018

கைதியின் கருத்துக்களுக்கு மதிப்பளித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் பராமரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை
மேற்கொள்ளவுள்ளது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கைதியொருவர் அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்;.
இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ஆர். எம் வசந்தராஜா தலைமையிலான குழுவினர் சிறைச்சாலையில் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டபோது விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின்னர் நேற்று முன் தினம் சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.
சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பெண் கைதிகளை நீதிமன்றிற்கு அழைத்து செல்லும் போதும் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்து வரும் சந்தர்ப்பங்களிலும் பாரிய அநீதிகள் இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.