ஞாயிறு, மே 06, 2018

யாழ் போதனா வைத்தியசாலையில், தாதிபோல் நடித்து நகை அபகரிப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில், தாதிபோல் பாசாங்கு செய்த மர்மப் பெண் ஒரு வர் வயோதிப பெண்ணிடம் நகைகளை அபகரித்து சென்ற சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலை யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்ட வயோதி பப் பெண் ஒருவர், யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவதற்கு சென்றுள்ளார். மருத் துவ பரிசோதனை மேற்கொள் வதற்காக, அவர் வைத்தியசாலை 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணை பின் தொடர்ந்த மர்மப் பெண் ஒரு வர், அவரிடம் வந்து தான் வைத்திய சாலை தாதி எனவும் சத்திரசிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற் கொள்ள வெள்ளை நிற ஆடைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

தன்னுடன் துணைக்கு வந்த மகள் சென்று விட்டதாகவும், தன் னால் ஆடைகள் வாங்க முடியாது எனவும் வயோதிபப்பெண் தெரிவித் துள்ளார்.உடனே தான் சென்று ஆடை கள் வாங்கிவருவதாக வயோதிப பெண்ணிடம் பணத்தை பெற்று சென்று ஆடைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். பின்னர் சத்திரசி கிச்சைக்கு ஆயத்தமாகுமாறு கூறி யுள்ளார்.

பின்னர், தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது எனவும் அவற்றை கழற்றி தருமாறு கோரியுள்ளார். சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் ஆபரணங்களை பெறு மாறு தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணை நம்பிய வயோதிப மாது தான் அணிந்திருந்த, சங் கிலி, மோதிரம், தோடு என்பவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அவற்றை பெற்றுக்கொண்டு அப்பெண் அவ் விடத்தை விட்டு சென்றுள்ளார்.

பல மணி நேரமாகியும் யாரும் அழைக்காத காரணத்தினால் அங் கிருந்தவர்களிடம் குறித்த வயோ திப மாது நடந்தவற்றை கூறியுள்ளார். அதன் பின்னர் தான் இவரை ஏமாற்றி நகைகளை பெற்று சென்ற விடயம் தெரியவந்துள்ளது.அதன் பின்னர் பொலிஸாருக்கு இவ் விடயம் தெரியப்படுத்தப்பட் டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.