தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 09, 2018

இலங்கையில் அழகுசாதன கிரீம் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் பெரும்பாலான களி (கிறீம்) வகைகள் உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால் இவற்றை ஒழுங்குறுத்தலுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த களி வகைகளில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறை குறித்த விடயங்கள் அடங்கிய ஆவணமும் அதில் குறிப்பிடப்படும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள இது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தலைவர் ஹஸித திலகரத்ன கைச்சாத்திட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சட்டத்திற்கு அமைவாக செயல்படுவதற்கு தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்த்தர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சருமத்தில் பூசப்படும் சில களி வகைகள் தரமற்றது என்பது தெரிய வந்துள்ளது. அத்தோடு பயன்படுத்த வேண்டிய அளவு குறிப்பிடப்படாமையினால் சருமத்தில் கூடுதலான களி பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.