புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 07, 2018

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிக்க முயற்சி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிப்பதற்கா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிப்பதற்கா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூர்த்தி செய்யப்படாமல் உள்ள, நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது