புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 12, 2018

ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித்துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் முன்வைக்காதுவிட்டார் அவர் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாபஸ்பெற்றுக்கொள்ளும் என்றும் சதாசிவம் வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தத் தகவல்களை முன்வைத்திருக்கின்றார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவூ காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டரங்கு திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலையான வவூணதீவூ காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீண்டகால தேவையாக இருந்த விளையாட்டரங்கு தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றையதினம் பாடசாலை அதிபர் திருநாவூக்கரசு தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவின் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனே கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசின் இருப்பினை தக்கவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக ஏற்றுக்கொண்டதுடன், அதற்கும் ஒரு வரையரை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் உட்பட தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஸ்ரீலங்கா அரசு கைவிட்டால் சர்வதேச சமூகத்தை நாடுவதாகவும் தெரிவித்தார்